கொழும்பின் பிரபல தமிழ் பாடசாலையில் மனோ கணேசன் எம்.பி அடாவடி – பெற்றோர்கள் கடும் விசனம்..! samugammedia

கொழும்பின் பிரபல தமிழ் ஆண்கள் பாடசாலையின் உள்விவகாரங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பக்கச்சார்பாக நடந்து கொண்ட விடயம் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது குறித்த பாடசாலைக்கு முன்பாக போக்குவரத்து நெருக்கடியினை தீர்ப்பதற்கு பாடசாலை சமூகம் பொலிசாரின் உதவியை நாடியுள்ளது.

குறித்த பாடசாலை பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக பெற்றோர்கள் மாணவர்களை, தங்களது வாகனங்களில் கொண்டு வந்து இறக்குவதற்கும் ஏற்றுவதற்கும் பொலிஸாரினால் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் அந்த இடத்தில் பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்துகள் நிறுத்தப்படுவதாகவும், இதனால் தங்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் பெற்றோர்களும் பாடசாலை சமூகமும் விசனம் தெரிவித்தனர்.

குறித்த பேருந்துகள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் அமைப்பாளர் பால சுரேஷ் என்பவருக்கு சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த பாடசாலை அபிவிருத்தி சங்க பொதுக்கூட்டத்தில் இந்த பிரச்சனையை நிவர்த்தி செய்யும் படி பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தபோதும்  மனோவின் அமைப்பாளர் பாலசுரேஷ் அதனை எதிர்த்து அடாவடித்தனம் செய்துள்ளார்

ஆனாலும் பெற்றோர்கள் அவற்றை நிவர்த்தி செய்யும் விதமாக கையெழுத்து வேட்டை ஒன்றினை சேகரித்து பாடசாலை நிர்வாகத்திடம் கையளித்திருந்தார்கள் . 

இதேவேளை அண்மையில் பாடசாலை நிர்வாகம் no parking மற்றும் Drop and Pick up சட்டத்தை அமுல்படுத்துமாறு போலிசாரிடம் கோரிக்கை விடுத்ததனை அடுத்து போலீசார் நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர் . 

மேலும் இந்த பிரச்சனையை தீர்க்கும் முகமாக பம்பலப்பிட்டி போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி, பாடசாலை சேவை வாகன உரிமையாளர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினருடன் கடந்த செவ்வாய் கிழமை ஒரு ஒரு கூட்டம் ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 

எனினும் குறித்த கூட்டத்திற்கு அழையா விருந்தாளியாக மனோ எம்.பி கலந்து கொண்டு பாடசாலை நிர்வாகம் , பெற்றோர் மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்கு எதிராக தனது அமைப்பாளர் பாலசுரேசுக்கு ஆதரவான முடிவுகளை தெரிவித்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாடசாலை சமூகத்தை சேர்ந்தவர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார் 

அதனையடுத்து பாடசாலை உள்விவகாரங்களில் அழையாவிருந்தாளியாக கலந்து கொண்ட மனோவிற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து உடனடியாக பாடசாலையை விட்டு புறப்பட்டிருந்தார்.

இந்நிலையில் ஒரு பொறுப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு பொறுப்பற்று ஒரு பக்கச்சார்பாக செயற்படுவதற்கு யார் அதிகாரம் கொடுத்து என குறித்த பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply