களுத்துறை- றைகம் தோட்டத்தில் தீபாவளி கொண்டாடிய இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான்! samugammedia

களுத்துறை – றைகம் தோட்டத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தோட்ட மக்களுடன் இணைந்து தீபாவளி கொண்டாடியுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் உள்ள றைகம் தோட்ட மக்கள் மீது பெரும்பான்மை இளைஞர்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

குறித்த பிரச்சினைக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தலையீட்டினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அத்துடன், அந்த பகுதி மக்களுக்கு தொடர்ந்தும் பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு செந்தில் தொண்டமான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையிலே, குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட செந்தில் தொண்டமான் மக்களுடன் இணைந்து கேக் வெட்டி, பாட்டசு வெடித்து தீபாவளியை கொண்டாடியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தேர்தல் காலத்தில் மாத்திரம் அரசியல் தலைமைகள் எமது தோட்டத்திற்கு விஜயம் மேற்கொல்லும் நிலையில், நாம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வை முன்வைத்தது இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் மாத்திரமே எனக்கூறி தோட்ட மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் திருகேதீஸ், உப தலைவி மார்கிரட், கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பத்மநாபன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

Leave a Reply