யாழில் மூவாயிரத்திற்கும் அதிகமான வளர்ப்பு நாய்கள் தொடர்பில் அறிவிப்பு…!samugammedia

யாழ். மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் கடந்த 3 மாத காலப்பகுதியில் மட்டும் 3ஆயிரத்து 983 வளர்ப்பு நாய்களுக்கு விசர் நோய்க்கான தடுப்பூசி மருந்து போடப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை யாழ். மாநகரப் பிரதேசத்திலுள்ள 8 பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவிலுமே இந்தத் தடுப்பூசி மருந்து ஏற்றப்பட்டுள்ளது.

அத்துடன் 290 பெண் நாய்களுக்கு கருத்தடை சத்திரசிகிச்சை மூலம் கருத்தடை செய்துவைக்கப்பட்டது.

அத்துடன் யாழ் வீதியில் நடமாடும் கட்டாக் காலி நாய்களும் பிடிக்கப்பட்டு ஏ.ஆர்.வி. தடுப்பூசி ஏற்றப்பட்டது என்றும் சுகாதாரப் பிரிவினர் குறிப்பிட்டனர்.

Leave a Reply