மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம் வெற்றி…! நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!samugammedia

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் அரச காணியில் அத்துமீறிய குறியேறியவர்களை வெளியேறுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி அன்வர் சதாத் இன்று (13) கட்டளை பிறப்பித்தார்.

மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பகுதியில் மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான அரச காணியில் அத்துமீறி குடியேறியதாக தெரிவித்து 13 பேருக்கு எதிராக ஏறாவூர் நீதிமன்றில் மகாவலி அதிகார சபையினால் கடந்த கடந்த 2023.09.22 அன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு தீர்ப்புக்காக மன்றுக்கு எடுக்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறியதாக தெரிவிக்கப்பட்ட 13 பேரும் இன்று நீதிமன்றில் ஆஜராகி இருந்தனர்.

மகாவலி அதிகார சபை சார்பாக மன்றுக்கு அரச சட்டத்தரணி டில்கானி டி சில்வா ஆஜராகியிருந்தார். 

கடந்த 10ம் திகதி இடம்பெற்ற குறித்த வழக்கு இன்று(13) தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதிகாரம் பெற்ற அதிகாரிகளின் எந்த வகையான ஆவணமும்  நீதிமன்றுக்கு அத்துமீறி குடியேறியவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்களினால் சமர்ப்பிக்கப்படாததால் மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறிய குறித்த 13 பேரையும் வெளியேறுமாறு நீதவான் கட்டளை பிறப்பித்தார்.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களை அகற்றுமாறு கோரி அப்பகுதி கால்நடை பண்ணையாளர்கள் 60வது நாளாகவும் இன்றும் போராட்டம் முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *