நாளை முதல் சீருக்கு வருகிறது பேருந்து சேவை! samugammedia

நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பமான பேருந்து சேவையான காரைநகர் முதல்  முளாய் டச்சுவீதி ஊடாக சித்தன்கேணி – யாழ்ப்பாணம் வரையான 785/1 சேவையானது  நாளை 14.11.23 முதல் தினமும் மூன்று முறை சேவையாக போக்குவரத்தில் ஈடுபடவுள்ளது.

இதன்படி   தினமும் காலை பயண நேரமாக காரைநகர் துறை முகத்திலிருந்து 6.25 புறப்படும் பேருந்து   மூளாய் டச்சு றோட் வீதிக்கு  7.10 மணியளவில் வந்தடைந்து 7.40 க்கு யாழ்ப்பாணம் சென்றடைந்து பின்னர்  மீண்டும் யாழ்ப்பாணத்திலிருந்து 7.45 ஆரம்பித்து சித்தன்கேணி  டச்சு வீதிக்கு 8.45 மணியளவில் வருகை தந்து  காரைநகர் 9.35 துறைமுகத்தை சென்றடையும்.

மீண்டும் இரண்டாவது சேவையானது 10. 00 மணிக்கு  புறப்பட்டு  10.35 மணிக்கு டச்சு வீதிக்கு வருகைதந்து   11.20 யாழ்ப்பாணதிற்கு சென்றடையும் அங்கிருந்து 1.30  புறப்பட்டு 2.05 க்கு டச்சு வீதியூடாக வருகை தந்து காரைநகர் துறைமுகத்திற்கு   2.50 மணியளவில் சென்றடையும்.

மூன்றாது சேவையானது காரைநகரிலிருந்து 3.00 மணிக்கு  புறப்பட்டு 3.35 மணிக்கு  டச்சு வீதி ஊடாக யாழ்ப்பாணம் 4.20 சென்றடையும் அங்கிருந்து 4.45 புறப்பட்டு 5.20   டச்சு  வீதியீடாக காரைநகர் துறைமுகம் 6.05   சேரும். தினமும் இந் நேரப்படி சேவை இடம்பெறும். 

இந்த சேவையானது  காரைநகர்- மூளாய் பிள்ளையார் கோவிலடி – டச்சு வீதி ஊடாக சித்தன்கேணி யாழ்ப்பாணம் வீதி – வட்டுக்கோட்டை சந்தி – அராலி செட்டியார்மடம் ஊடாக யாழ்ப்பாணம்  செல்லும் இந்த சேவையை முறையாக பயன்படுத்தி  நேரகாலத்தை கவனத்தில் கொண்டு பொதுமக்கள் குறித்த சேவையினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

Leave a Reply