இந்தியாவின் பிரபல நகைச்சுவை பேச்சாளர் திரு.மோகனசுந்தரம் அவர்களது சிறப்புரையானது யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது
“நல்லதோர் குடும்பம்” என்ற தலைப்பின் கீழ் எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு இந்த சிறப்புரை நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வினை யாழ்ப்பாணம் – இந்திய துணைத்தூதரகம் ஏற்பாடு செய்துள்ளதுடன், இது முற்றிலும் இலவசமான ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது. அனைவரையும் இதில் கலந்துகொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.