அரச வருமானத்தை 15% ஆக அதிகரிக்க வேண்டும் – இல்லையேல் நாடு மீண்டும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் – ரணில் தெரிவிப்பு…! samugammedia

அரச துறையின் மாதாந்த சம்பளத்திற்காக 93 பில்லியன் ரூபா, காப்புறுதி, மருந்துகள், ஓய்வூதியம் உட்பட பொதுநல செலவுகளுக்கு 30 பில்லியன் ரூபா, கடன் வட்டி செலுத்த 220 பில்லியன் ரூபா என 03 பிரதான செலவுகளுக்காக  மாத்திரம் அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 383 பில்லியன் ரூபாவை செலவிடுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள வரவுசெலவு திட்ட உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

 மேலும், 2021ஆம் ஆண்டுக்குள் 900 பில்லியன் ரூபாவாக இருந்த வங்கி மிகைப்பற்று, 70 பில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளதாக, 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

அரச வருமானத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% இலிருந்து 15% ஆக அதிகரிக்காவிட்டால் நாடு மீண்டும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒரு சில குழுக்களின் எளிய மற்றும் அழகான வாக்குறுதிகளால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது எனவும் தெரிவித்தார். 

அத்துடன், நீண்ட காலமாக இடம்பெற்றுவரும் வரி விலக்குகள் உள்ளிட்ட 

குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாக அரச வருமானம் அதிகரிக்கும் போது அதனை விட அதிகமான வரிச் சலுகைகளை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Leave a Reply