பெருந்தோட்ட வீடுகளை நிர்மாணிப்பதற்கு 4 பில்லியன் நிதி ஒதுக்கீடு…!samugammedia

பெருந்தோட்ட வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணி உரிமைகளை வழங்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக 4 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரையினை முன்வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறினார்.

கடந்த சில ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாமல் உள்ள கிராமப் புற வீதிகள் , மற்றும் பழுதடைந்த கிராம வீதிகளை பராமரிக்க, பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

Leave a Reply