உலக வங்கியின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்!

உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 5 வருடங்களில் இலங்கையின் சுகாதாரத் துறைக்கு எவ்வாறு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் கலந்துறையாடுவதற்காகவே குறித்த குழுவினர் வருகை தந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த குறிவினர் நேற்று கொழும்பு – மாளிகாவத்தை சுகாதாரப் பிரிவுக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவில் சுகாதார நிபுணர்களுடன் பொருளாதார நிபுணர்களும் உள்ளடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply