யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால் இதுவரை 15 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றையதினம் மாத்திரம் எட்டு குடும்பங்கள் அடை மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/388 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவரும், ஜே/400 கிராம சேவகர் பிரிவில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் இதுவரை 15 குடும்பங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/167 கிராம சேவகர் பிரிவில் ஆலயம் ஒன்றிற்கு மேலே அரசமரம் ஒன்று குடைசாய்ந்ததில் குறித்த ஆலயம் சேதமடைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.