மக்களே அவதானம்…! யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் விசேட அறிவிப்பு…! samugammedia

சீரற்ற காலநிலை தொடர்வதால் மிக அவதானமாக இருக்குமாறு பொது மக்களிடம் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு கோரியுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 94 குடும்பங்களை சேர்ந்த 317 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். 

அதிகபட்சமாக கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் 55 குடும்பங்களை சேர்ந்த181 நபர்களும், பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 9 குடும்பங்களை சேர்ந்த 36 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதே போன்று ஏனைய பிரதேச செயலர் பிரிவுகளிலும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாவும் எனினும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் இதன் பாதிப்புக்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் எனவும் சூரியராசா தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீரற்ற காலநிலை தொடர்வதால் பாதிப்புக்கள் ஏற்படலாமென்பதால் மிக  அவதானமாகவும் பாதுகாப்புடன் இருக்குமாறும் பொது மக்களை அனர்த்த முகாமைத்துவ பிரிவு கேட்டுள்ளது.

Leave a Reply