இளைஞர்களின் கோரிக்கைகள் நிச்சயம் பரிசீலிக்கப்படும்…! வடக்கு ஆளுநர் தெரிவிப்பு…! samugammedia

இளைஞர்களின் கோரிக்கை தொடர்பில் ஆராய்வதோடு, அவர்களோடு  இணைந்து பணியாற்ற விரும்புவதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

யாழ் இளவாலை  புனித ஹென்றி அரசர் கல்லூரியில் தீபாவளி தினத்தன்று, இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே ஆளுநர் இதனை தெரிவித்துள்ளார்.

சங்கத்தின் பத்தாம் ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வின் பிரதம அதிதியாக வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கலந்து சிறப்பித்தார். 

இளவாலை  வாலிபர் சங்கத்தினரால் பல கோரிக்கைகள் இதன்போது ஆளுநரிடம் முன்வைக்கப்பட்டன.

அவற்றை பரீசீலித்து தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஆளுநர் குறிப்பிட்டார். 

இதேவேளை பொதுத்  தேவைகள் தொடர்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாண ஆளுநர் தெரிவித்தார். 

யாழ்ப்பாணம் இளவாலை வாலிபர் சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, சமூக முன்னேற்றத்திற்கு இளைஞர் சங்கத்தின்  பங்களிப்பு அவசியம் தேவை எனவும் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் வலியுறுத்தினார். 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *