இலங்கை மக்களை கடுமையாக நெருக்கும் சர்வதேச நாணய நிதியம்! அமைச்சர் நிமல் பகிரங்கம் samugammedia

 

சர்வதேச நாணய நிதியம் இலங்கை மக்களை அதிகம் நெருக்குவதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று (15) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளின் காரணமாகவே மின்கட்டணம் மற்றும் தண்ணீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், 

ஆட்சிக்கு வந்தவுடன் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிபந்தனையின்றிய கடனை பெற்றுத் தருவதாக சஜித் பிரேமதாச வாய்ப்பேச்சுக்கு கூறுகிறார் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply