உயர் நீதிமன்ற தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்ள போவதில்லை! மகிந்த ராஜபக்ச அதிரடி samugammedia

பொருளாதார நெருக்கடி தொடர்பில் உயர் நீதிமன்ற தீர்ப்பை நான் ஏற்றுக் கொள்ள போவதில்லை என முன்னாள் அதிபரும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 தலதா மாளிகை வழிபட்டின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்களான மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரே காரணம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பு தொடர்பில் மகிந்த ராஜபக்ச தெரிவிக்கையில், உயர்நீதிமன்ற உத்தரவை யாராலும் மீற முடியாது அதனை எதிர்க்கவும் முடியாது. அதனை நாம் மதிக்க வேண்டும்.

எனினும், உயர் நீதிமன்ற தீர்ப்பை நான் ஏற்றுக் கொள்ள போவதில்லை. எனது தரப்பிலான கருத்துக்களை நீதிமன்றில் முன்வைக்க வாய்ப்பு கிடைக்குமென நினைக்கிறேன். என்றார்.

அதேவேளை, இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு ஆதரவளிப்பதாகவும் நாடாளுமன்ற வாக்கெடுப்பின் போது அதனை தோல்வியடைய செய்வதற்கான தேவை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் நடைபெறவுள்ள எந்தவொரு தேர்தலையும் எதிர்நோக்க நாம் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி எனவும்,

அதனால் வரவு செலவுத் திட்டத்தை முழுமையாக ஆதரவளிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply