மத்திய மலைநாட்டில் வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம்…!samugammedia

நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தீபாவளிக்கு பின்னர் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.

இதனால் மஸ்கெலியா, சாமிமலை, கிளங்கன் ஆதார வைத்திய சாலைகளில் வெளி நோயாளிகள் பிரிவிலும் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி இர்ஷாட் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இப் பகுதியில் கனத்த மழை மற்றும் காலை வேளையில் சற்று உஸ்னமான காலநிலை தோன்றியுள்ளது.

இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வாந்தி, வயிற்றுப் போக்கு வைரஸ் காய்ச்சல் தோன்றியுள்ளது.

இதனால் நாளாந்தம் அதிக அளவில் வெளி நோயாளிகள் பிரிவிலும், தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர் என அவர் கூறினார்.

பொது மக்களை கொதிக்க வைத்து ஆறிய பின் நீரை பருகுமாறும் தேவை அற்ற பலகாரம் சாப்பிட வேண்டாம் எனவும், மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் எனவும்,வெளியே செல்லும் போது தொப்பி அணிந்து கொண்டு செல்ல வேண்டும் என மக்களுக்கு அறிவுருத்தல் விடுத்து உள்ளார்.

கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பாரிய அளவில் இட நெருக்கடியால் அங்கு வரும் நோயாளிகள் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply