ஜனாதிபதியின் வரவு செலவு திட்டம் ரோலர் கோஸ்ட்டில் பயணம் செய்வது போன்றது – கிண்டலடிக்கும் ரவூப் ஹக்கீம் எம்.பி…!samugammedia

 ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டமானது வெளியிலிருந்து கடன்களை வாங்கவேண்டும் என்ற எண்ணத்தில் அமைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்  ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார் 

இன்றையதினம் இடம்பெற்றுள்ள பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு,  இது தொடர்பில் உரையாற்றிய அவர், 

ஜனாதிபதி நாட்டு மக்களை அனைவரையும்  ரோலர் கோஸ்ட்டில் பயணம்  போக கூட்டிச்செல்ல பாக்கிறார். இதில் செல்வது பயங்கரமானது இதையே தான் ஜனாதிபதி விரும்புகிறார். வரவு செலவு திட்டத்தை தயாரிக்கும் போது ஜனாதிபதி ரோலர் கோஸ்ட்டில் பயணம் செய்திருக்கலாம் ஆனால் அதன் விளைவுகளை மக்கள் தான் அனுபவிக்க வேண்டி வரும். இஸ்ரேல் காஸா போர் போல 2005ம் ஆண்டு ஐ.நாவானது ஒரு கொள்கையை ஏற்படுத்தி இருந்தது அதாவது ஒரு அரசாங்கம் தனது மக்களை கொடுமையாக நடத்தும் போது சர்வதேச சமூகம் தலையிடக்கூடியவாறு அக்கொள்கை இருந்தது. அவ்வாறான நிலைமையில் சர்வதேச சமூகம் தலையிட முடியும். இக்கொள்கையை மேற்கத்தேய நாடுகள் பின்பற்றி இருந்தன. இதன் மூலம் இவர்கள் நாட்டுக்குள் அத்துமீறினார்கள். இஸ்ரேல் காஸா போரை நிறுத்துவதற்கு எமது நாடு ஐ.நாவுடன்  இணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். அங்கு சமாதானத்தை கொண்டு வரவேண்டும். 

வரவு செலவு திட்டத்தை ஆய்வு செய்வோமாக இருந்தால் வருமனத்தை விட அதிகமாக கடன்களும் செலவுகளும் உள்ளன. இந்த வரவு செலவு திட்டம் எதை காட்டுகிறது என்றால் நாங்கள் வெளியிலிருந்து கடன்களை வாங்க வேண்டும் என காட்டுகிறது. இதையே தான் ஜனாதிபதி விரும்புகிறார்

செலவுகள் கடந்த வருடத்தை விட இவ்வருடம் அதிகரித்துள்ளது.  ஆரம்ப காலத்தில் கல்விக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இவ்வரசாங்கம் அப்படி செய்யவில்லை. ஜனாதிபதி உள்நாட்டு கடன் சீரமைப்பு தொடர்பாக தனியார் துறையில்  கைவைக்க பாக்கிறார். இது மேலும் பிரச்சினையாகவே  முடியும். ஜனாதிபதி வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் நிலைமை பற்றி விளக்கமளிக்க வேண்டும். நாட்டில் நடக்கின்ற மோசடிகளுக்கு ஜனாதிபதி பதில் கூற வேண்டும். 

நாட்டின் ஊழல்களை இருக்க வேண்டுமென IMF கூறி இருக்கிறது. நாட்டில் நடக்கின்ற மோசடிகளை நடக்க விட்டு வேடிக்கை பார்த்துவிட்டு வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்க வந்துவிட்டீர்கள். இப்படி இருந்தால் நாட்டின் நிலையை மாற்றவும் முடியாது. பொருளாதார சிக்கலை தீர்க்கவும் முடியாது.   என மேலும் தெரிவித்துள்ளார் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *