சாதனை படைத்த யாழ் இளைஞன்..! தேசிய மட்ட போட்டியில் தங்கப் பதக்கம்..! samugammedia

 

ஆண்களுக்கான 20 வயதுக்கு மேற்பட்ட குண்டெறிதல் போட்டியில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய எஸ்.மிதுன்ராஜ் தங்கப்பதக்கம்  வென்றுள்ளார்.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெறும் 34 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா  இன்று காலை நடைபெற்றது. 

இவ் விளையாட்டு விழாவிலேயே யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய எஸ்.மிதுன்ராஜ் தங்கப்பதக்கம்  வென்றுள்ளார்.

இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில், இடம்பெறும் இந்த விளையாட்டு விழாவில் அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட வீர, வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply