நிலவும் சீரற்ற காலநிலை…! 6ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு…!இடர் முகாமைத்துவ நிலையம்…!samugammedia

நாட்டில் தற்போது நிலவும்  சீரற்ற காலநிலையால்1680 குடும்பங்களை சேர்ந்த 6089 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தொடர் மழையினால் நீர் நிலைகள் நிரம்பி வழிவதுடன் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது.

அதேவேளை,  ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 138 குடும்பங்களைச்சேர்ந்த 442 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 மாத்தறை மாவட்டத்தில் 4 குடும்பங்களை சேர்ந்த 21 பேரும் காலி மாவட்டத்தில் 3 குடும்பங்களை சேர்ந்த 11 பேரும் கம்பகா மாவட்டத்தில் 2 குடும்பங்களைச்சேர்ந்த 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி மாவட்டத்தில் 11 குடும்பங்களை சேர்ந்த 36பேர் பாதிக்கப்பட்டுள்தோடு 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

கேகாலையில் 29 குடும்பங்களை சேர்ந்த 115 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 17 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 

யாழ் மாவட்டத்தில் 978 குடும்பங்களை சேர்ந்த 3372 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 33வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அத்துடன் 9 குடும்பங்களை சேர்ந்த 36 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

வடமேல் மாகாணம் புத்தளம் மாவட்டத்தில் 654 குடும்பங்களை சேர்ந்த 2546 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5பேர் காயமடைந்துள்ளதோடு 53 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 157 குடும்பங்களை சேர்ந்த 520 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply