சினிமாவின் திருப்பு முனைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நடிகை, தயாரிப்பாளர், மனைவி, இரட்டை குழந்தைகளுக்கு தாய் என இருந்து வரும் நயன்தாரா கோலிவுட் சினிமாவின் பெருமையாக மட்டுமில்லாமல், ஒரு அடையாளமாகவே இருந்து வருகிறார்.

சினிமாக்களில் எல்லோராலும் கொண்டாடப்படுபவராக ஹீரோக்களே இருப்பார்கள். எந்த கதையாக இருந்தாலும் ஹீரோதான் முக்கியத்துவம் வாய்ந்தவராக இருப்பதுடன், ஹீரோயின், காமெடியன், வில்லன், குணச்சித்திரம் என அனைத்து கதாபாத்திரங்களுடன் பயணப்பதன் காரணமாகவே அவர்களின் பெயருக்கு முன் புகழ்பாடி அடைமொழியும் இடம்பெறுகிறது. ஹீரோவுக்கு அடுத்தபடியாக ஹீரோயின் என்கிற முக்கியத்துவம் இருந்தாலும், காலங்காலமாக பின்பற்றப்படும் அந்த வழிமுறை சமீப காலமாக மாற தொடங்கியுள்ளது.

இந்த நூற்றாண்டு ஹீரோயின்களும், ஹீரோவுக்கு இணையாக கதையின் பிரதான கதாபாத்திரங்களில் தோன்றி தங்களது திறமையால் ரசிகர்களை கவர்ந்து நன்மதிப்பையும் பெற்று வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் கதையின் நாயகியாக தோன்றி பல வளர்ந்து வரும் நடிகைகளுக்கும் புதியதொரு நம்பிக்கையும், பாதையும் வகுத்து கொடுத்த நாயகியாக இருப்பவர் நயன்தாரா.

இதன்காரணமாகவே லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டம் அவரது பெயருக்கு முன்னர் ஒட்டிக்கொண்டது. பொதுவாக லேடி சூப்பர் ஸ்டார் என தெலுங்கு சினிமாவை சேர்ந்த விஜயசாந்தியை கூறுவார்கள். ஹீரோவுக்கு இணையாக ஆக்ஷன் அதிரடி படங்களில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி வந்த அவருக்கு இந்த பெயர் வைக்கப்பட்டது. ஆனால் தனது அற்புத ஆக்டிங் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவராக திகழ்ந்த நயன்தாரா, தமிழ் சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டாராக உருவெடுத்தார்.

கதாநாயகர்களை கொண்டாடி ரசிகர்களை கதாநாயகிகளையும் கொண்டாட வைத்ததோடு, சினிமா தயாரிப்பாளர்களையும் ஹீரோயினை வைத்து படம் எடுத்து வெற்றி பெறலாம் என தன்னம்பிக்கையை அளித்தார்.

டிவி தொகுப்பாளராக தொடங்கிய நயன்தாராவின் பயணம் இப்போது கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற உயரத்தை அடைய செய்திருக்கிறது. தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் குடியிருக்கும் நடிகையாக சுமார் இரண்டு தசாப்தங்களை நெருங்கியிருக்கும் நடிகையா நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

Leave a Reply