தமிழீழத் தேசியக்கொடி நாள் தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிவிப்பு…!samugammedia

தமிழீழத் தேசிய கொடி நாள் நவம்பர்21 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படவுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில்  நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

ஏறக்குறைய நான்கரை நூற்றாண்டு காலனிய ஆட்சியில் தமிழர்களிடம் கொடி இல்லை. 1989 ஆம்ஆண்டு தமிழ்த் தேசியக்கொடியின் முக்கியத்துவத்தை முதன் முதலில் உணர்ந்த மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம்திகதி தமிழீழத் தேசியக்கொடியை அறிமுகப்படுத்தி ஏற்றி வைத்தார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றம் அக்டோபர் 24 ஆம் திகதி 2021 ம் ஆண்டு பிரதமர் உருத்திரகுமாரன் தலைமையில் ஏகமனதாக தீர்மானித்து நவம்பர் 21 ஆம் திகதியை தமிழீழத் தேசியக் கொடி நாளாக பிரகடனப்படுத்தியது.

கனடா, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும், அமெரிக்காஆகிய நாடுகளில் தேசியக்கொடி நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந் நிகழ்வுகளில் பறை முழக்கம் , எழுச்சி நடனம், இசைக்குழு அணிவகுப்பு, தாயகப் பாடல்கள், சிறப்புரைகள் ஆகியன இடம்பெறும். அத்துடன்நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் இளையசமுதாயத்திற்கு நடாத்தப்படும் கட்டுரைப் போட்டியில்வெற்றி பெற்றவர்களுக்கான பரிசும், பங்கேற்றவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்படும்.

கட்டுரைகளின் தலைப்புக்களாக “தமிழ்த் தேசியத்தின் குறியீடு மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்”, தமிழீழக் கொடிநாள்”, “மாவீரர் நாள்” ஆகியன கொடுக்கப்பட்டன.

சிறீலங்காவின் வாளேந்திய சிங்கத்தை சித்தரிக்கும் கொடியின் வடிவமைப்பில் தமிழர்கள் எவரும் பங்கேற்கவில்லை. சிறீலங்காக் கொடியை தமிழர்கள்எவரும் ஏற்கவும் இல்லை. சிறீலங்காக் கொடி, 1815 ஆம் ஆண்டு கண்டி இராச்சியம் ஆங்கிலேயர்களிடம்வீழ்ச்சி அடைந்ததன் 100 வது ஆண்டான 1915 ஆம்ஆண்டு சிங்களப் புத்திஜீவிகளால் உருவாக்கபட்டது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேசியக்கொடிநாள் பிரகடனத்தில், தமிழீழத் தேசியக்கொடி, தமிழீழத்தின் இறைமையையும், சுயநிர்ணயஉரிமையையும் குறிக்கின்றது எனவும் மற்றும் இக்கொடி உலகம் முழுவதிலும் உள்ள தமிழீழ தேசத்தைச் சேர்ந்த அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இப் பிரகடனத்தில் தமிழீழத் தேசியக்கொடி, தமிழீழ தேசம் அந்நிய ஆட்சியிலிருந்தும், சிங்களபௌத்த மேலாதிக்கத்திலிருந்தும் விடுதலை பெறுவதற்கும் தமிழீழ தேசம் செய்த அளவிட முடியாத உன்னத தியாகத்தை நினைவூட்டுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொடி நாள் பிரகடனத்தில் இறுதியாக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும், மீண்ட இறைமையின் அடிப்படையிலும், ஈடு செய் நீதியின் அடிப்படையிலும், சமூக நீதி நிலவும் தமிழீழத்தை அமைப்பதற்கு உறுதியுடனும், திடசங்கற்பத்துடனும் உழைப்போம் என உலகிற்கு உரத்த குரலில் எடுத்து சொல்வோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply