திருகோணமலை – சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்ல சிரமதானப் பணிகள் இன்றைய தினம் (18) நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டது.
பெருமளவான மக்கள் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சிலரும் இதில் மக்களோடு இணைந்து சிரமதானப்பணிகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.