விசேட தேவையுடைய மாணவர்களின் ஒருங்கிணைந்த மகிழ்வூட்டல் செயற்பாடு நிகழ்வு…!samugammedia

‘இயலாமை என்று எதுவும் இல்லை’  என்ற தொணிப் பொருளில் விசேட தேவையுடைய மூவீன இளையோர் மற்றும் மாணவர்களின் ஆளுமை திறனை மேம்படுத்தும் வகையிலான ஒருங்கிணைந்த மகிழ்வூட்டல் செயற்பாடு நிகழ்வு இன்று (21)நடைபெற்றது.

மேற்படி நிகழ்வானது சமூக சேவைகள் திணைக்கள தொழிற்பயிற்சி நிறுவனம் கும்புறுமூலை வாழைச்சேனையில்   மட்டக்களப்பு மாவட்ட IDove   இளையோர் இணைந்து  விழுது நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இளையோர் மத்தியில் இன,மத,மொழி,பேதம் கடந்து இயலாமை என்பதை தாண்டி எங்களாலும் முடியும் என்ற மேலான சிந்தனையுடன் அவர்களது திறன்களை கட்டியெழுப்பி ஆற்றல்களை வெளிப்படுத்தும் செயற்பாடாக இவ் நிகழ்வு அமைந்திருந்தது.

இன்றைய நிகழ்வில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கான மகிழ்சிகரமான மனநிலையினை ஏற்படுத்தும் வகையில் அவர்களிடையே தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் ஓவியம் வரைதல்,பொம்மலாட்ட உருவங்கள் தயாரித்து அவற்றின் மூலம் கருத்து பரிமாற்றம் மேற்கொள்ளல் என்பன போன்ற செயற்பாடுகள் இடம்பெற்றன.

நிகழ்வின் இறுதியில் பலன் தரும் பயிர்கன்றுகளும் நடப்பட்டன.

குறித்த நிகழ்வில் அதிதியாக சமூகசேவைகள் திணைக்கள தொழிற்பயிற்சி நிறுவன பொறுப்பாளர் ஜெ.சுகந்தினி கலந்து கொண்டார்.

Leave a Reply