உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரி சடலத்துடன் போராடும் மக்கள்!

 யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரி, சித்தங்கேணி சந்தியில் உயிரிழந்த இளைஞனின் சடலத்துடன் பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது மாமிசவேட்டை முடிந்ததா…வட்டுக்கோட்டை பொலிஸாரை கைது செய் என மக்கள் கோசங்களை எழுப்பினர்.

அலெக்ஸின் இறுதிச் சடங்கு  – மக்கள் திரண்டு அஞ்சலி

வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞன் நாகராசா அலெக்ஸின் இறுதிச் சடங்குகள் அவரின் இல்லத்தில் இன்று நடைபெற்றது.

இளைஞனின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர்.

அலெக்ஸின் மரணமானது வட்டுக்கோட்டை பொலிஸாரின் கோர முகத்தை எடுத்துக் காட்டுவதுடன், சம்பந்தப்பட்ட பொலிஸார் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் நால்வர் இடமாற்றம்   செய்யப்பட்டுள்ளமை வெறும் கண்துடைப்பு என கூறப்படுகின்றது.

இந்நிலையில் இளைஞனின் மரணத்துடன் சம்பந்தபட்ட பிலிஸாரை கைது செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

The post உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரி சடலத்துடன் போராடும் மக்கள்! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *