பாலியாற்று திட்டம் வெறும் கண்துடைப்பு வேலையே – பாராளுமன்றத்தில் அங்கஜன் ராமநாதன் எம்.பி. ஆதங்கம்..!samugammedia

வெளிப்படையாக சம்பள ஏற்றம். மறைமுகமாக பொருட்களின் விலை ஏற்றம். ஒரு காலத்தில் பிரிட்டனுக்கு கடன் கொடுத்த நாங்கள் இப்போது கடனாளியாக இருக்கிறோம். எனஸ்ரீ லங்கா சுதந்திர  கட்சியின்  உறுப்பினரும் அமைச்சருமான  அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார் 

பாராளுமன்றத்தில் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட  வரவு செலவு திட்ட உரையின்  போதே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் 

வடக்கின்  பாலியாறு திட்டம் மூலமாக மக்கள் பயனடைவார்கள். இதன் மூலம் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும். இதற்காக நிதியை ஒதுக்கிய ஜனதிபதிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். கடந்த வருடத்தை போல நிதியை ஒதுக்கினாலும் அதை செய்வது கிடையாது. அதைப்போலவே இத்திட்டம் காணப்படுமாயின் அது கண்துடைப்பாகவே அமையும் என மக்கள் நினைக்கிறார்கள். 

கடல் நீரை சுத்தமாக்கும் திட்டம் எந்நிலையில் உள்ளது? இது பாலியாறு திட்டத்தால் கைவிடப்படுமா? 60 வருடமாக தண்ணீர் கேட்கும் மக்களை நீங்கள் கவனிக்கவில்லை. இதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும். நீங்கள் மேற்கொள்கின்ற அபிவிருத்தியில் யாருக்கு என்ன பயன்? வடக்கில் வீடு கட்டி தருகிறோம் என்று சொல்லி மக்களை ஏமாளியாக்குகிறீர்கள். இது உலக நாடுகளுக்கு நாங்கள் வடக்கை அபிவிருத்தி செய்கிறோம் என்று காட்டும் ஒரு படம் அவ்வளவுதான். 

பட்ஜெட் என்பது தேர்தலுக்காகவே. இது ஓராண்டு திட்டம் என்பதால் மக்களுக்கு சலிப்பு ஏற்படுகிறது. வெளிப்படையாக சம்பள ஏற்றம். மறைமுகமாக பொருட்களின் விலை ஏற்றம். ஒரு காலத்தில் பிரிட்டனுக்கு கடன் கொடுத்த நாங்கள் இப்போது கடனாளியாக இருக்கிறோம். வருமானத்தை அதிகரிக்காமல் செலவு மட்டும் செய்து கொண்டு இருக்கிறோம். 

நாட்டில் இனக்கலவரங்களையும் வன்முறைகளையும் தூண்டி விடுகிறீர்கள். இதனை சமாளிக்க நாடு பெரும் செலவை சந்தித்துள்ளது. இந்த செலவுகள் நாட்டின் வளத்தை அழிக்கிறது. மீள உருவாக்க இரட்டிப்பு செலவை உருவாக்கி இருக்கிறது. இதன் மூலம் வருமானம் மற்றும் மனித இழப்புகளே அதிகம். இதன் அடிப்படை பிரச்சினையான இன முரண்பாட்டை தீர்க்க நாம் என்ன செய்கின்றோம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply