யாழ் நல்லூரில் தியாகதீபம் நினைவுத்தூபிக்கு முன்பாக மாவீரர் நினைவாலயம் திறப்பு…!samugammedia

யாழ் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களுடன் கூடிய மாவீரர் நினைவாலயம்  இன்று மாலை 6 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

1982 கார்த்திகை 27 முதல் 2009 வைகாசி 18 வரையான காலப்பகுதியில் தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகியவர்களில் கிடைக்கபெற முடிந்த 24,379 வீரர்களின் பெயர்களினை உள்ளடக்கிய கல்லறைகளையும் சில தகவல்களையும் உள்ளடக்கியதாக நினைவாலயம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன், முன்னாள் மாநகரசபை உறுப்பினர்கள், மாவீரர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply