முறிகண்டியில் புகையிரத்துடன் மோதிய யானை உயிரிழப்பு…! samugammedia

முல்லைத்தீவு முறிகண்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் யானை புகையிரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளது.

குறித்த விபத்து இன்று பிற்பகல் 6.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த உத்திரதேவி புகையிரதத்துடன் மோதியே விபத்துக்குள்ளானது.

விபத்தில் சிக்கிய யானை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பகுதி மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்டமையால், பொலிசார், வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு புகையிரத அதிகாரிகளால் தகவல் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply