திடீரென தாழிறங்கிய கிணறு : கிளிநொச்சியில் பரபரப்பு! samugammedia

சீரற்ற காலநிலை காரணமாக  கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஒருவரது கிணறு  தாழிறங்கியதால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டது.

கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக நேற்றைய தினம் தாழ்விறங்கியுள்ளது. 

தங்களது அன்றாட பயன்பாட்டை முடித்து மறுநாள் காலை எழுந்து கிணற்றைப் பார்த்த பொழுது கிணறு முற்று முழுதாக தாழ் இறங்கியதை அவதானித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கிராம  அலுவளர் நேரில் சென்று தொடப்பாக பார்வையிட்டுள்ளார்.  அத்துடன் கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த நீர் இறைக்கும் பம்பியும் கிணறில் முழ்கியுள்ளது. 

கடந்த 20 வருடங்களுக்கு மேல் சுத்தமான குடிநீரை பெறக்கூடிய வகையில் அயலவர்கள் பலரும் பயன்படுத்தி வந்த நிலையில் குறித்த கிணறு முற்று முழுதாக தாழ் இறங்கியதை அடுத்து வீட்டு உரிமையாளர் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளார். 

கிணற்றின் சூழ உள்ள பகுதி பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதுடன் இது தொடர்பாக அதிகாரிகள் தமக்கேதேனும் ஒரு வகையில் உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *