மிக இளவயது நீதிபதியாக தெரிவான தமிழர்; பலரும் பாராட்டு! samugammedia

வடமாகாணம் மன்னார் மாவட்ட வரலாற்றில் மிக இளவயது தமிழ் நீதிபதியாக மன்னாரை சேர்ந்த அர்ஜுன்  வரும் முதலாம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த வில்வரட்ணம் அரியரட்ணம் – அர்ஜுன் எனும் தமிழரே இவ்வாறு பதவியேற்கவுள்ளார். புனித சவேரியார் பாடசாலையின் மாணவரான இவர் 34 வயதில் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.  

மன்னார் வரலாற்றில் ஓர் இளம் நீதிபதியாக அர்ஜுன் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார். அதேவேளை தமிழ் நீதிபதிகள் உருவாகுவது எட்டாக் கனியாகவே உள்ளது.   

 இந்நிலையில் நாடளாவிய நீதியில் இடம்பெற்ற நீதிபதிகளுக்கான போட்டியில், அர்ஜுன் அகில இலங்கை ரீதியில் இவர் 14 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

அத்துடன் மன்னாரில் தெரிவான இளம் தமிழ் நீதிபதி என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார். இந்நிலையில் பலரும் அவருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *