சம்பூர் ஆலங்குளத்தில் நினைவேந்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள ஒரு சிலருக்கு மட்டும் நீதிமன்றத் தடை…..! samugammedia

சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு 17 பேருக்கு மட்டும் மூதூர் நீதவான் நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம்  சம்பூர் போலீசாரினால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நகர்த்தல் பத்திரத்துக்கமைய இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதனை வழங்குவதற்காக இன்றைய தினம் சம்பூர் போலீசார் துயிலுமில்லத்துக்கு வருகைதந்து குறித்த தடையுத்தரவுகளை வழங்க முற்பட்ட போது தடையுத்தரவில் குறிப்பிடப்பட்ட பெயர்களில் தவறாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தம்முடைய பெயர்களை அடையாளப்படுத்தக்கூடிய தரவுகள் எவையும் இல்லாமையினால் பலர் அதனை ஏற்க மறுத்ததுடன் குறித்த தடையுத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படுவதாகம் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் க.பண்பரசன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். 

குறித்த தடையுத்தரவு உடைக்கப்படும் எனவும் குறித்த தடையுத்தரவினால் நினைவேந்தல் செயற்பாடுகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படாது என்பதனால் யாரும் குழப்பமடையவோ அச்சமடையவோ தேவையில்லை எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *