ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாளுக்கு தடையுத்தரவு கோரி பொலிசார் செய்த விண்ணப்பம் நீதிமன்றினால் நிராகரிப்பு…!samugammedia

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னெடுக்க தடையுத்தரவு வழங்கக் கோரி வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஈச்சங்குளம் பொலிஸாரால் கோரப்பட்டிருந்த நிலையில் குறித்த தடையுத்தரவு கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இரு பிரிவுகளாக மாவீரர் நினைவேந்தல் ஈச்சங்குளத்தில் இடம்பெறவுள்ளதால் அங்கு கலவரம் வெடிக்கும் வெடிக்கலாம் எனவும் அதேவேளை தடைசெய்யப்பட்ட அமைப்பினரின் சின்னங்களை பயன்படுத்துவார்கள் என்பதையும் சுட்டிக்காட்டியே பொலிஸாரால் நேற்றும் இன்றும் தடையுத்தரவு விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்தவகையில்,  குறித்த வழக்கு விசாரணைகள் இன்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில், 
இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது கட்டாயம். அதை யாரும் தடுக்க முடியாது எனவும் கலவரங்கள் ஏற்படுமாயின் அவர்களை கைது செய்யுமாறும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிபதி சுபாஷினி தேவராஜா உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *