கொழும்பு மாநகர சபைக்குள் 3,465 சந்தேகத்திற்குரிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான 3,465 டெங்கு நோயாளர்களில் 80% டெங்கு நோயாளர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் 7.1 வீதமும், அரச நிறுவனங்களில் 60 வீதமும், நிர்மாணப் பணியிடங்களில் 80 வீதமும் மட்டுமே டெங்கு பரவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஆய்வின் மூலம் நோய் பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர் விஜயமுனி மேலும் தெரிவித்தார்.