
ஊடகம் நடுநிலையாக இருக்க வேண்டும் என்று படிக்கின்றோம். ஆனால் அதை எவ்வளவு தூரம் பின்பற்றுகின்றோம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என யாழ் பல்கலைக் கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் ஏ.சண்முகதாஸ் தெரிவித்துள்ளார்.
சமூகம் மீடியா குழுமத்தின் புதிய கட்டட திறப்புவிழா யாழில் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஊடகம் நடுநிலையாக இருக்க வேண்டும் என்று நாம் சொல்கின்றோம், விரும்புகின்றோம். ஆனால் அதை எவ்வளவு தூரம் செய்கிறோம் என்பது எமக்கு தெரியும்.
ஆனால் அந்த கருத்து வேறுபாடுக்கு மத்தியில் நாம் அந்த பணியை நாம் மக்களுக்காக செய்கின்றோம். இந்த பணியை நாம் சத்தியம் செய்து செய்ய வேண்டும். அந்த ஊடகம் தான் நீண்ட காலம் நிலைத்து நிற்கும். இடையிலே வந்து இடையிலே போவது இல்லை ஊடகம், உண்மை, செம்மை, அழகு இந்த மூன்றும் ஊடகத்துக்கு இருக்க வேண்டும். மக்களுக்காக செய்யும் சேவையில் எந்த குறையும் இருக்க கூடாது. இது ஒரு தொண்டு. இது ஒரு சேவை. – என்றார்.