ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு…! யாழில் வெடித்தது போராட்டம்…!samugammedia

ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் அரசின் திட்டம் கை விடப்பட வேண்டும் எனக் கோரி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தின் வட மாகாண தலைமை அலுவலகத்திற்கு முன்னால் இன்று(22)  காலை ரெலிக்கொம் நிறுவன ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊழியர் நலன்களை பாதுகாப்போம், முடிவு வரும் வரை போராடுவோம், ரெலிக்கொம் நிறுவனத்தை காப்பாற்றுவோம்,  சம்பள முரண்பாட்டை உடன் நிவர்த்தி செய்க எனும் வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *