திடீரென களமிறங்கிய உத்தியோகத்தர்கள்…! யாழில் சிக்கிய வர்த்தகர்கள்…!samugammedia

யாழ் மாவட்ட செயலகத்தின் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள பல வியாபார மையங்களில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவ் வேளையில் வியாபாரிகளினால் பயன்படுத்தப்பட்ட நிறுக்கும் கருவிகளை பரிசோதித்த போது அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தினரால் அங்கீகரிக்கப்படாத மற்றும் நடப்பாண்டில் முத்திரை பதிக்கப்படாத நிறுக்கும் கருவிகளை பயன்படுத்திய வியாபாரிகள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் இனிவரும் காலங்களில் நிறுவை அல்லது அளவை, நிறுக்கும் அல்லது அளக்கும் உபகரணங்களை வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்தும் வியாபார நிலையங்களையும் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்எனவும் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *