மூச்சு விட கஷ்டப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஆறு மாத பெண் குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
கலாசாலை வீதி, திருநெல்வேலியைச் சேர்ந்த பிருந்தாபன் அர்ச்சனா என்ற ஆறு மாத பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை (22) இரவு 10.00 மணியளவில் குழந்தை மூச்சு விட கஷ்டப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 12.30 மணியளவில் உயிரிழந்துள்ளது.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமர் விசாரணைகளை மேற்கொண்டார்.