ப்ரைட் ரைஸ் பிரியர்களுக்கு சோகமான செய்தி…! samugammedia

எதிர்வரும் நாட்களில் ப்ரைட் ரைஸ்,  கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுப் பண்டங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தற்போதைய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை கருத்திற்கொண்டு அடுத்த சில தினங்களில் உணவுப் பொருட்களின் விலையை 50 ரூபாவினால் அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை சந்தையில் அரிசி, மரக்கறிகள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றின் விலை உயர்வினால் எதிர்வரும் நாட்களில் அரிசி, பிரைட் ரைஸ், கொத்து போன்றவற்றின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார். .

Leave a Reply