கோரதாண்டவமாடிய கனமழை…!யாழில் 46 ஏக்கர் நெற்செய்கை முற்றாக அழிவு…!samugammedia

யாழில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையுடன் கூடிய காலநிலையால் 46 ஏக்கர் பரப்பளவு நெற்செய்கை முற்றாக அழிவடைந்துள்ளதாக யாழ். மாவட்ட விவசாயப் பணிப்பாளர் திருமதி கைலேஸ்வரன் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வேலணை பிரதேச செயலர் பிரிவில் 7.04 ஏக்கர் நெற் செய்கையும்,  காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 3.325 ஏக்கர் நெற்செய்கையும், சங்கானை பிரதேச செயலர் பிரிவில் 18.75 ஏக்கர் நெற்செய்கையும், பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 17 ஏக்கர் நெற்செய்கையும் இவ்வாறு அழிவடைந்துள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply