இலங்கை சிறைச்சாலை ஒன்றில் மர்ம காய்ச்சல் – பலர் வைத்தியசாலையில் அனுமதி..!Samugammedia

மாத்தறை சிறைச்சாலையின் கைதிகள் குழுவொன்று காய்ச்சல் ஒன்று பரவியதன் காரணமாக பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய சிறைச்சாலையின் செயற்பாடுகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலைமையின் அடிப்படையில் மாத்தறை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ள புதிய கைதிகளை நீதிமன்றங்களினால் அகுனகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் உத்தரவின் பேரில், மாத்தறை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட புதிய கைதிகளை அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், சுகாதார பரிந்துரைகளின்படி பார்வையாளர்களை அனுமதிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply