மலையக மக்கள் ஏனைய மக்கள் ஏனைய சமூகங்களுக்கு இணையாக வாழ வேண்டும் – ஜீவன் தொண்டமான் கோரிக்கை…!samugammedia

மலையக மக்களின் ஒற்றுமை, பன்முகத்தன்மை, மற்றும் பாரம்பரியத்தின் முழக்கத்தை உலகறியச்செய்யும் “200 இல் மலையகம் மாற்றத்தை நோக்கி” எனும் மலையக மக்களை கௌரவிக்கும் நிகழ்வுக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அத்துடன் மலையை சமூகம்  ஏனைய சமூகங்களுக்கு இணையாக மலையக மக்களும் வாழ வேண்டும் வேண்டும்  என்ற  கோரிக்கையையும் விடுத்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  மேலும் தெரிவித்துள்ளதாவது, 

200 வருடங்களுக்கு முன்னர் மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து, எமது பாரம்பரியத்தை வளப்படுத்தியதில் குறிப்பிடத்தக்க பயணம் ஆரம்பமாகியது. இன்று நாம் இந்த வரலாற்று நிகழ்வை கொண்டாடும் தறுவாயில், அம்மக்கள் இந்நாட்டுக்கு ஆற்றிய சேவையினை பராட்டவும் அவர்களை கௌரவிக்கவும் நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். 

200 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு  “ஆதி லெட்சுமி” என்ற கப்பல் மூலம் பெரும் எதிர்பார்ப்புக்களுடன் வந்தடைந்த மலையக மக்கள், அதன் பின்னர் நம்பிக்கை இழந்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கள் சௌமியமூர்த்தி தொண்டமான்  மூலம் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு துளிர் விட ஆரம்பித்தது. 

அத்தகைய சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் பாசறையிலிருந்து வந்த கௌரவ நுவரேலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி இராதா கிருஸ்ணன் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு வரலாறு முக்கியத்துவம் வாய்ந்தது. என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நாட்டில் நாம் அனைவரும் ஏனைய சமூகங்களுக்கு இணையாக வாழ வேண்டும். அதற்காக எமது சமூகத்தில் இன்று உயர்ந்த நிலையில் இருக்கின்ற அனைவரையும் கௌரவப்படுத்தும் நோக்கத்தோடு நடத்தப்படும் இவ்வாறான நிகழ்வுகளில் மூலம், அன்று முதல் இன்று வரை இந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பை நல்கி வரும் மக்கள், கடந்த  வருடங்களாக இந்த நாட்டுக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்பது வெளிப்படுத்தப்படுகிறது. இது மலையக மக்கள் தொடர்பில் உலகறியக் கிடைக்கும் வாய்ப்பாகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *