எல்ல மற்றும் தெமோதர புகையிரத நிலையங்களுக்கு இடையிலுள்ள பாலத்திற்கு அருகில் ரயிலில் மோதி இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு தபால் புகையிரதத்தில் மோதுண்டு இந்த யுவதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
21 வயதான குறித்த இளம்பெண் இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு மூன்றாவது தடவையாக தோற்றுவதற்குத் தயாராக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.