திஸ்ஸமஹாராம ரன்மினிதென்ன கலார பிரதேசத்தில் யானையின் தாக்குதலில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலக்கம் 558, குடக கமனாய நவய பிரதேசத்தில் வசித்து வந்த எச்.எம்.டி. சந்திரசேன என்ற 62 வயதுடையவரே யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் மருமகன் வீட்டிற்கு சென்ற நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.