அண்மைக் காலங்களாக சமூகவலைத்தளங்கள் மூலம் ஆசை வார்த்தை காட்டி பணமோசடிகள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறானதொரு நிலையில் யாழிலும் 26 இலட்சம் ரூபா மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக இரு முறைப்பாடுகள் பாதிக்கப்பட்டவர்களால் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒருவர் சுமார் 20 லட்சம் ரூபாவையும். மற்றையவர் சுமார் 6 லட்சம் ரூபாவையும் இழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இணையம் மூலம் முதலீடு செய்து பணம் ஈட்டலாம் என ஆசை வார்த்தை காட்டியே இந்த மோசடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சமூகவலைத்தளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று யாழ்ப்பாணம் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் விஷாந்த தெரிவித்துள்ளார்





