யாழில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் வடமராட்சி, வல்வெட்டித்துறையிலுள்ள ஆலயமொன்றில் நேற்றையதினம் காலை வசந்த மண்டப பூசை இடம்பெற்றபோது ஒலிவாங்கியில் தேவாரம் ஓதிக் கொண்டிருந்த சமயம் முதியவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இந்நிலையில் அங்கிருந்தவர்களால் உடனடியாக வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சிவப்பிரகாசம் இராசரத்தினம் (வயது 88) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் உயிரிழந்த முதியவிரன் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.