விஜயகாந்தின் மறைவு இலங்கைத் தமிழருக்கும் ஓர் மிகப்பெரிய இழப்பு…!சாணக்கியன் இரங்கல்…!samugammedia

தே.மு.தி.க நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் மறைவு திரை உலகம் மற்றும் தமிழக அரசியலிலும் மட்டுமல்லாது இலங்கைத் தமிழருக்கும் ஓர் மிகப்பெரிய இழப்பாகும் என மட்டக்களப்பு மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தே.மு.தி.க தலைவரும் தென்னிந்திய திரையுலக  பிரபல நடிகருமான விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (28) அதிகாலை  காலமானார்.

இந்நிலையில் அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், இலங்கையை சேர்ந்த அரசியல் தரப்பினரும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,

புரட்சிக்கலைஞர் கப்டன் விஜயகாந்த் எம் மக்கள் மீது அளவுகடந்த அன்பு கொண்டவர். அவரது அள்ளித்தரும் பண்பும் பிறர் பசியை தன் பசியாய் உணர்ந்த  அன்புள்ளம் கொண்டவர். அவரது மறைவு திரை உலகம் மற்றும் தமிழக அரசியலிலும் மட்டுமல்லாது இலங்கைத் தமிழருக்கும் ஓர் மிகப்பெரிய இழப்பாகும்.  

புரட்சிக்கலைஞர் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவால் வாடும் அனைவருக்கும் இந்த நேரத்தில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *