அமைப்பாளர் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்ட தயாசிறி…! மைத்திரி அதிரடி…!samugammedia

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை வெற்றிடமாகவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளர் பதவிக்கு வடமேல் மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் லக்ஷ்மன் வெண்டருவவை மாவட்ட தலைவராக நியமிக்குமாறு அமைப்பாளர்கள்இ கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிங்கிரியவில் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற குருநாகல் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர,  கடந்த செப்டம்பர் மாதம் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply