திருகோணமலை மாபிள் பீச் கடற்கரையில் நீராடச் சென்ற நான்கு பேரில் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளததாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குருநாகல் பகுதியிலிருந்து திருகோணமலைக்கு பஸ் ஒன்றில் 23 பேர் கொண்ட குழுவினர் சுற்றுலா வந்ததாகவும் நேற்று (29) மாலை மாபிள் பீச் கடற்கரையில் குளித்துக்கொண்டிருக்கும் போது நான்கு பேரில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளவர் குருநாகல் மாவதகம இங்குருவத்த பகுதியைச் சேர்ந்த சுதர்சன பிரபோத் சுபசிங்க (18 வயது) எனவும் தெரியவருகின்றது.
காணாமல் போன இளைஞரை தேடும் பணியில் கடற்படையினரும் மீனவர்களும் ஈடுபட்டுள்ளனர்.
நீரில் மூழ்கிய சம்பவம் தொடர்பில் சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.