கிளிநொச்சியில் கௌரவிக்கப்பட்ட அசானி…! நிகழ்வில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்…!samugammedia

பிரபல தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரிகமப’ என்ற நிகழ்ச்சியில் இலங்கையின் மலையகத்தில் இருந்து பங்குபற்றி இலட்சக்கணக்கான மக்களின் மனதில் இடம்பிடித்த மலையக குயில் அசானி இன்றையதினம் கிளிநொச்சியில் கௌரவிக்கப்பட்டார்.

‘மாற்றத்தை நோக்கிய பயணத்தில் ஒன்றிணைந்த நாம்’ எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சியில் இன்று(30)  நடைபெற்ற  மலையகம் 200 நிகழ்வின் போதே அசானி கௌரவிக்கப்பட்டார்.

இந்நிலையில்,குறித்த நிகழ்வு தொடர்பில் செய்தி அறிக்கையிட சென்ற ஊடகவியலாளர்களிடம் அங்கிருந்த சிலர் மிகவும் கீழ்த்தரமான வார்த்தை பிரயோகங்களுடன்  முரண்பாட்டில் ஈடுபட்டமையால் அங்கிருந்து   ஊடகவியலாளர்கள் வெளியேறியுள்ளனர்.

அத்துடன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வருமுன் அசானியை வலுக்கட்டாயமாக  மங்கள வாத்தியங்களுடன் அசானியை அழைத்து வருவதற்கு ஏற்பாடுகள் செய்ததுடன் சிறுமிகளின் நடன குழுவையும் ஆடவைத்து வலுக்கட்டாயமாக அழைத்து வந்தமை குறிப்பிடத்தக்கது 

சமூக வலைதளம் என்று கூறிய நபர்களிடமிருந்து அசானி விலகிய பின்னர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விருந்தினர்களுடன் அசானி அழைத்து வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *