மஹியங்கனை வீதியூடாக செல்லும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை…!samugmmedia

 கண்டி – மஹியங்கனை வீதியின் ஹுன்னஸ்கிரியில் இருந்து ஹசலக வரையிலான பகுதியில் உறைபனியுடனான மழை பெய்து வருகின்ற நிலையில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

 இன்று (02) காலை 8 மணி அளவில் ஏற்பட்ட மண்சரிவினால் மரங்கள் வேரோடு சாய்ந்து வீதியில் வீழ்ந்ததாகவும் இதனால் குறித்த வீதியின் போக்குவரத்து சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் தடைப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

இதேவேளை, கண்டி – மஹியங்கனை வீதியின் ஹுன்னஸ்கிரியில் இருந்து ஹசலக வரையிலான பகுதியில் உறைபனியுடனான மழை பெய்து வருகின்றது.

எனவே மண்சரிவு காரணமாக கண்டி மஹியங்கனை வீதியூடான போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளதாள்  மக்களை அவதானமாக இருக்குமாறு பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் உன்னஸ்கிரிய பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் அதனை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply