மகாவலி கங்கையின் கிளை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு – வெள்ளத்தில் மூழ்கிய ஊர் மக்கள்..!samugammedia

பொலன்நறுவை மாவட்டத்தில் அமைந்துள்ள  பராக்கிரம சமுத்திரம் மற்றும் மன்னம்பிட்டி குளம் ஆகியவற்றின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக மகாவலி கங்கையின் கிளை ஆறான வெருகல் ஆற்றின் நீர்மட்டம் மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்துள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக  வட்டவன், மாவடிச்சேனை, சேனையூர், ஆணைத்தீவு முதலிய ஊர்கள் வெள்ளத்தில்  மூழ்கியுள்ளன. இதன் காரணமாக இவ்வூர்களை சேர்ந்த  106 குடும்பத்தைச் சேர்ந்த 295 பேர் வட்டவன் ஶ்ரீ தான்தோன்ரீஸ்வரர் வித்தியாலயத்திலும்,  140 குடும்பத்தைச் சேர்ந்த 429 பேர்  மாவடிச்சேனை வெருகலம்பதி இந்து மகா வித்தியாலயத்திலும் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இவர்களைத் திருகோணமலை மாவட்ட நலன்புரி சங்கத் தலைவர் திரு.சண்முகம் குகதாசன் மற்றும் செயலாளர் திரு.கணபதிப் பிள்ளை சிவானந்தன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

அது மட்டுமல்லாது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் பேரிடர் முகாமைத்துவத் துறையினரால் சமைத்த உணவு வழங்கப்படுவதோடு  இம்மக்கள் வீடுகளுக்கு திரும்பும் போது  இடருதவி வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் திருகோணமலை மாவட்ட நலன்புரி சங்கம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *