திருகோணமலை கல்மெடியாவ குளத்தின் நீரேந்து பகுதியில் திடீர் கசிவு…! களத்தில் இறங்கிய கடற்படையினர்…!samugammedia

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பகுதியில் உள்ள கல்மெடியாவ குளத்தின் நீரேந்து பகுதியில் கசிவு ஏற்பட்டதையடுத்து கடற் படையினரின் உதவியால் சரிசெய்யப்பட்டது.

குறித்த சம்பவம் இன்று (03) காலை இடம் பெற்றது .

நீர்ப்பாசன திணைக்களம் ஊடாக குறித்த குளப்பகுதியின் நீர் கசிவு தொடர்பில் கடற்படையினரின் உதவியுடன் சரி செய்யப்பட்டது. நாட்டில் நிலவும் அசாதாரண சூழ் நிலை காரணமாக பல குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு ஆறுகளின் கிளைகளும் திறக்கப்பட்டதால் இக் குளத்தின் நீர் மட்டமும் அதிகரித்ததன் விளைவாக இக் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த கல்மெடியாவ குளத்தின் சுமார் 200மீற்றர் தூரம் கொண்ட துருசி நீரினுள் கடற்படையினர் தங்களது உயிர்களை துச்சமென மதித்து நீர் கசிவு தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.குளத்தின் நீரேந்து பகுதி பூட்டப்பட்டு நீர் கசிவு தொடர்பில் நீருக்கடியில் அதன் பாதக விளைவுகள் தொடர்பில் தொழில் நுட்ப ரீதியான விளைவுகளை கண்டு கொண்டனர்.

அதன் பின் சுமூகமாக குளத்தின் நீர் மட்டம் திறக்கப்பட்ட நிலையில் கசிவு ஏற்படாதவாறு சரி செய்யப்பட்டு குளத்து நீர் மீண்டும் பின்னர் திறக்கப்பட்டது.

இதில் நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ்.கௌரிதாசன், தம்பலகாமம் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப் பணிப்பாளர் கே.சுகுணதாஸ்,அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள்,கடற்படையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *